மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே | சித்தர் பாடல்
🌹மாளாத சக்தியடா மனிதன் சக்தி
மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே
மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை
மேவியுனக் குட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக வென்றேனு மெப்போ தேனும்
அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே
துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே✋🏻